ஜெனீவா, மே 29 - நேற்று, ஸ்விட்ஸ்லாந்து ஜெனீவா நகரிலிருக்கும் சுவிஸ் ஆல்ப்ஸ்' மலைத்தொடரிலிருக்கும் பனிப்பாறை சரிந்து விழுந்தது. அதில் 300 பேர் வசிக்கும் 'பிளாட்டன்' கிராமம் பெருமளவில் சேதமடைந்து
மேலும், இச்சம்பவத்தில் ஆடவர் ஒருவர் காணாமல் போனதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன 64 வயது நபர் உள்ளூர்வாசி ஆவார்.
மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, இருந்தபோதும் அந்நபர் இன்னும் கிடைக்கவில்லை என மீட்பு பணி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பனிப்பாறை ஏற்படுத்திய சேதத்தில் அக்கிராம மக்களுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது அதிகாரபூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் அதிகாரிகள், தரைமட்டமான கிராமத்தை, மறுசீரமைத்து அப்பகுதி மக்களுக்கு மீட்டு தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.
பனிப்பாறை சரிந்து விழுந்து, கிராமம் தாக்கப்படும் காணொளி, சுவிட்ஸ்லாந்து ஊடகத்தில் வெளிவந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


