வாஷிங்டன், மே 29 - அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் 2 புறாக்கள் விமானத்திள் புகுந்ததால் Delta Air Lines விமானத்தின் புறப்பாடு தாமதமாகியது.
Minneapolis-Saint அனைத்துலக விமான நிலையத்தில், குறிப்பிட்ட விமானம் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்துக்கு புறப்படத் தயாரான போது இச்சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இரு புறாக்களின் வருகையால் 119 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களை ஏற்றியிருந்த அவ்விமானம், 56 நிமிடங்கள் தாமதமாகவே இலக்கை நோக்கி புறப்பட்டது.
இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு Delta Air Lines வருத்தம் தெரிவித்தது. விமானத்தினுள் பணியாளர் புறாவைப் பிடிக்கும் காட்சி தற்போது வைரலாகியுள்ளது.


