ஷா ஆலம், மே 29 - எதிர்வரும் சனிக்கிழமை தாமான் ஸ்ரீ கோம்பாக், டேவான் பெரிங்கினில் நடைபெறவுள்ள சிலாங்கூர் மூத்த குடிமக்கள் சுகாதாரத் திட்டத்தில் பங்கேற்க 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள்
அழைக்கப்படுகிறார்கள்.
தொழில்முறை சுகாதாரக் குழுவால் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்பாளர்களின் வசதிக்காக இலவச போக்குவரத்து வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான சுகாதாரப் பரிசோதனை, சுகாதார விளக்கவுரை மற்றும் உடற்பயிற்சி ஆகிய அங்கங்கள் இடம் பெறும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் முகநூல் பதிவில் கூறினார்.
அறுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், குடும்ப உறுப்பினர்கள், பராமரிப்பாளர்கள் அல்லது அக்கறையுள்ள அண்டை வீட்டார் இலவச சுகாதார பரிசோதனை திட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
சோர்வு, திட்டமிடப்படாத எடை இழப்பு மற்றும் உடல் பலவீனம் போன்ற முதுமைக்கான ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது இந்த பரிசோதனைத் திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
ஆர்வம் உள்ள பொதுமக்கள் https://bit.ly/


