நிபோங் தெபால், மே 29 - எஸ்.பி.எம் தேர்வுக்கு பிறகு, மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர. படிவம் ஆறு அதாவது எஸ்.டி.பி. எம் கல்வியை முக்கியத் தேர்வாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார். எஸ்.டி.பி. எம் உலகளவிலிருக்கும் 2000-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களின் அங்கீகாரம் பெற்ற கல்வியாகும்.
மேலும், மலேசிய கல்வி ப்ளூபிரிண்ட் 2013 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான திட்டங்களில், படிவம் ஆறின் மறுபெயரிடுதலும் ஒன்றாகும் என்று பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
கல்விக்கான தொடர்ச்சி மற்றும் சமத்துவ அணுகலை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் 2025 முதல், ஆறாம் படிவ மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளி உதவி (BAP) தொகை வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று பட்லினா குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டம் 2029 வரை தொடரும் மற்றும் அதன் மொத்த செலவு 2.9 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று அவர் அறிவித்துள்ளார்.


