சிப்பாங், மே 29 - கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் ஆசியான் ஐ.சி.சி சீனா உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட, சீனப் பிரதமர் லீ கியாங் நேற்று தாயகம் திரும்பினார்.
காலை 9.15 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் இருந்து லீ கியாங் மற்றும் பேராளர்கள் பயணிக்கும் விமானம் புறப்பட்டது.
கேப்டன் முகமட் ஷாரின் முகமட் யூசோப் தலைமையிலான அரச மலேசிய இராணுவப் படையின் முதல் Batalion-இன் 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பை லீ கியாங் பார்வையிட்டார்.
பின்னர் லீ கியாங் மற்றும் பேராளர்களை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வழியனுப்பி வைத்தார்.
ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், GCC உச்சநிலை மாநாட்டில் சீனா கலந்து கொண்டது. தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான வியூக உறவுகளை வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.
பெர்னாமா


