கோலாலம்பூர், மே 29 - மலேசியாவில் 2024-ஆம் ஆண்டுக்கான EF ஆங்கிலப் புலமைக் குறியீட்டுப் பட்டியலில் 585 புள்ளிகளுடன் பேராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதனை அடுத்து, 584 புள்ளிகளுடன் கெடா இரண்டாம் இடத்தையும், 583 புள்ளிகளுடன் பினாங்கு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
பகாங் மற்றும் சரவாக் மாநிலங்கள் 580 புள்ளிகளையும் சிலாங்கூர் 575 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
மேலும், எதிர்பார்க்காத மாநிலங்களில், மக்களிடையே ஆங்கிலப் புலமை கணிசமாக உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், மலேசியா உலகில் 26-ஆவது இடத்தை வகிக்கிறது. ஆசிய அளவில், பிலிப்பின்ஸ் மற்றும் சிங்கப்பூருக்கு அடுத்து நாம் மூன்றாமிடத்தில் உள்ளோம்.
இதுவே நகரங்கள் வாரியாக 598 புள்ளிகளுடன் ஷா ஆலாம் முதலிடத்திலும் 585 புள்ளிகளுடன் கோத்தா பாரு இரண்டமிடத்திலும் 584 புள்ளிகளுடன் கோலாலம்பூர் மூன்றாமிடத்திலும் உள்ளன.


