புக்கிட் ஜாலில், மே 29 - இங்லீஷ் பிரிமியர் லீக்கின் ஜாம்பவான் அணியான Manchester United, தனது ஆசிய சுற்றுப்பயண நட்புமுறை ஆட்டத்தில் ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணியிடம் 0-1 என தோல்வி கண்டது.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் 72,550 இரசிகர்கள் முன்னிலையில் ரூபன் அமோரிம் அணி தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முற்பாதி ஆட்டம் கோல் எதும் இன்றி சமநிலையில் முடிந்த நிலையில், பிற்பாதியின் 72-வது நிமிடத்தில் மியன்மாரின் ``Maung Maung Lwin`` ஆசியான் ஆல் ஸ்டார்ஸின் வெற்றி கோலை புகுத்தினார்.
தங்களின் அபிமான அணி கோல் வேட்டை நடத்தும் என்ற எதிர்பார்ப்பில் குவிந்திருந்த இரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே வெற்றிப் பெற்ற ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோப்பையை எடுத்து வழங்கினார்.


