வாஷிங்டன், மே 29 - ஸ்டார்ஷிப் விண்கலன் அதன் ஒன்பதாவது சோதனைப் பயணத்தின் போது வெடித்தது. இது SpaceX-க்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு தோல்வி பயணங்களுக்குப் பின்னர், வெற்றிப் பெறுவதற்காக எலோன் மாஸ்க் நிறுவனம் இச்சாவாலை தொடர்ந்துள்ளது.
400 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் விண்கலன் Texas, Boca Chica-இல் உள்ள SpaceX Starbase தளத்தில் இருந்து கிழக்கு நேரப்படி இரவு மணி 7.37 மணிக்கு ஏவப்பட்டது.
Starshipயில் திடீர் கட்டமைப்பு செயலிழப்பு ஏற்பட்டதால், தோல்வியை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவானதாக SpaceX தெரிவித்தது. மேலும், தங்களது குழு தொடர்ந்து மதிப்பாய்வு செய்து அடுத்த விண்கலன் சோதனைக்கு தயாராகும் என்றும் அது கூறியது.
இது போன்ற சோதனைகள், வெற்றியைக் கற்றுத் தருவதாகவும், ஸ்டார்ஷிப்-இன் நம்பக தன்மையை மேம்படுத்த உதவும் என்று SpaceX தமது X தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெர்னாமா


