கோலாலம்பூர், மே 29 - அமைச்சரவையிலிருந்தும் விலகுவது மற்றும்
விடுமுறை தொடர்பில் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி
மற்றும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்
நிக் நஸ்மி நிக் அகமது சமர்பித்த கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் பெற்றுள்ளார்.
அந்த கடிதத்தை நன்கு ஆராய்ந்த பிறகு அவர்களின் விண்ணப்பத்தை ஏற்க
பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் கூறியது.
இவ்விவகாரம் தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பில்
பிரதமர் பின்னர் அறிவிப்பார் என்ற அது குறிப்பிட்டது. அமைச்சர் பதவியை முறையே ஜூன் 17 மற்றும் ஜூலை 4ஆம் தேதி துறக்கவுள்ளதாக ரபிஸியும் நிக் நஸ்மியும் முன்னதாக அறிவித்திருந்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் 2025 தேர்தலில்
இவ்விருவரும் தோல்வி கண்டனர். கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவியை ரபிஸி தற்காக்க தவறிய வேளையில் உதவித் தலைவர் பதவிக்கான போட்டியில் நிக் நஸ்மி
தோல்வி கண்டார்.


