பெட்டாலிங் ஜெயா, மே 28 - இன்றிரவு, கோலாலம்பூர் புக்கிட் ஜாலீல் மைதானத்தில் நடக்கவிருக்கின்ற 'மான்செஸ்டர் யுனைடெட்' மற்றும் 'ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ்' அணிகளுக்கு இடையிலான 'மேபேங்க் சேலஞ்ச்' கோப்பை காற்பந்து போட்டியில் சுமார் 70,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று காவல்துறையினர் lகணித்துள்ளனர்.
பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பல்வேறு துறையினர்களுடன் இணைந்து காவல் துறையினர்கள் வலுவான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக, செராஸ் காவல்துறைத் தலைவர் ஐடில் போல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுப் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் பவர் பேங்குகள், மின்-சிகரெட்டுகள் மற்றும் இன்னும் சில பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ரசிகர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


