கோலாலம்பூர், மே 28 - நாட்டின் சட்டங்களுக்கு உட்படாமல் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ.) சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஒரு நாட்டின் இறையாண்மையின் அம்சங்களை சட்டம் பாதுகாக்கின்ற போதிலும் புதிய தொழில்நுட்ப மாற்றத்திற்கான நோக்கத்தின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
நாம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த விரும்பினால் பழைய பாணியில இறையாண்மை பற்றி சிந்திக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
"புத்திசாலித்தனமான மின்வலை: ஏ ஐ. ஒத்துழைப்பு இறையாண்மை
மூலம் இணைப்பை உருவாக்குதல்"என்ற கருப்பொருளைக் கொண்ட ஆசியான்-ஜி.சி.சி.பொருளாதார மன்ற ஆய்வரங்கில் உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.


