கோலாலம்பூர், மே 28 - கோலாலம்பூரில் தாமான் டானாவ் கோத்தாவில் உள்ள பராமரிப்பு நிலையத்திலிருந்த ஏழு மாத ஆண் குழந்தை இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் திங்கட்கிழமை காலை மணி 9 முதல் 11 மணிக்கு இடையே நடந்ததாக நம்பப்படுகிறது என்று வாங்சா மாஜு மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வஹாப்தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அக்குழந்தையின் தந்தை அதே நாளில் மதியம் மணி 1.26 அளவில் ஸ்தாப்பாக் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அக்குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதோடு 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டப் பிரிவு 31 (1) இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் குழந்தை பராமரிப்பு நிலையத்தின் தரப்பினரிடமும் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்தனர்.


