பூச்சோங், மே 28 - நேற்று மாலை தாமான் பூச்சோங் பெர்டானாவில் பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன.
அதில் டோயோட்டா அவன்சா காரில் ஓர் இந்தோனேசிய மாதுவும், அவரின் 2 வயது மகனும் சிக்கிக் கொண்டனர்.
பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை சம்பவ இடத்தை வந்து சேருவதற்குள், அங்கிருந்த பொது மக்கள் அவ்விருவரையும் பாதுகாப்பாக காரிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.
தாய் மற்றும் மகன் இருவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய தீயணைப்பு மீட்புப் படை, பெர்டுவா அருஸ், பெர்டுவா மைவி, புரோட்டன் வீரா, புரோட்டன் வாஜா, டோயோட்டா அவன்சா மற்றும் 1 டன் லாரி என 6 வாகனங்களை மீட்டது


