யாலா, மே 28 - தாய்லாந்து யாலா மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதி அறையில் மலேசியர் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.
அவரின் உடல் திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டதாகப் பெத்தொங் காவல்துறையின் நிலையத்தின் தலைவர் கொல் பொல் ஜக்காரின் லக்சானா தெரிவித்தார்.
இறந்த 67 வயதான அந்த ஆடவர் நெகிரி செம்பிலானை சேர்ந்தவர் என்றும், விடுமுறையைக் கழிக்க அவர் பெத்தொங் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
தங்கும் விடுதி ஊழியர்கள் அவரின் உடலை முதலில் கண்டதாக ஐக்காரின் குறிப்பிட்டார்.
இது குறித்து திங்கட்கிழமை காலை மணி 8.30 அளவில் தங்கும் விடுதி ஊழியர்களிடமிருந்து அழைப்பு வந்ததை அடுத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
மேலும், மாரடைப்பினால் அவர் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையின் வழி தெரியவந்துள்ளது.
பெர்னாமா


