கோலாலம்பூர், மே 28 - ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்த புருணை சுல்தான் (சுல்தான் ஹசானால் போல்கியா) நலமுடன் உள்ளார் என அந்நாட்டின் புருணை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
அவர் சற்று சோர்வடைந்திருப்பதால் மலேசிய மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின் பேரில், தேசிய இருதயக் கழகமான IJN-னில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சில நாட்கள் தங்கி அவர் ஓய்வெடுப்பார் என அந்த அறிக்கை தெரிவித்தது.
முன்னதாக, சுல்தான் ஹசானால் போல்கியா IJN-னில் அனுமதிக்கப்பட்டதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் உறுதிப்படுத்தினார்.
46-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, 2-ஆவது ஆசியான் - GCC எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாடு, முதலாவது ஆசியான் - GCC சீனா உச்ச நிலை மாநாடுகளில் பங்கேற்பதற்காக, மற்ற ஆசியான் தலைவர்களோடு புருணை சுல்தானும் கோலாலம்பூரில் இருக்கின்றார்.


