கோலாலம்பூர், மே 28 - மலேசியாவிலுள்ள முஸ்லீம்கள் எதிர்வரும் ஜூன் 7 ஆம் தேதி ஹஜ்ஜூபு பெருநாளைக் கொண்டாடுவார்கள் என்று ஆட்சியாளர்கள் மன்றத்தின் உதவிச் செயலாளர் டத்தோ முகமது அசெரல் ஜூஸ்மான் தெரிவித்தார்.
1 ஜுல்ஹிஜ்ஜா 1446எச் எதிர்வரும் வியாழக்கிழமை வருகிறது என்று அவர் நேற்றிரவு ரேடியோ டெலிவிஷன் மலேசியாவில் (ஆர்.டி.எம்.) ஒளிபரப்பான அறிவிப்பின் வழி அறிவித்தார்.
ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்குப் பிறகு மாட்சிமை தங்கிய பேரரசரின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் 1 ஜூல்ஹிஜ்ஜா 1446எச் 2025ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி வருகிறது என்றத் தகவலை மலேசிய ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளரின் சார்பாக நான் இதன் மூலம் அறிவிக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
எனவே, மலேசியா முழுவதும் உள்ள மாநிலங்களில் குர்பான் பண்டிகை 025 ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என்று அவர் கூறினார்.


