புத்ரஜெயா, மே 27 - மலேசியாவில் பல இடங்களில், கை, கால், வாய் நோய் (HFMD) மற்றும் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதனை தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சின் விரைவு சிகிச்சை மையம் (CPRC), 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 இப்போது மற்ற தொற்று நோய்களைப் போலவே பரவலானதாகக் கருதப்பட்டாலும், அதன் வீரியம் மிக ஆபத்தானவை. அதனால், அதற்கான வழிமுறைகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நோய்த்தடுப்புத் திட்டம் முக்கியமானது. அதைப் புறக்கணித்தால், சில தொற்று நோய்கள் மீண்டும் தோன்றக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் (NIP), போலியோ, அம்மை மற்றும் டிப்தீரியா (Difteria) போன்ற நோய்களும் அடங்கும் என்று டாக்டர் சுல்கிஃப்லி பதிவிட்டுள்ளார்.


