சிங்கப்பூர், மே 27 - இவ்வாண்டு ஜூலை 23-ஆம் தேதி சிங்கப்பூர் செந்தோசாவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கடல்வாழ் உயிரினக் காட்சியகம், திறக்கப்படும்.
சுமார் மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பொதுமக்களை வரவேற்க காட்சியகம் தயாராக உள்ளது.
மேலும், பழைய காட்சியகத்தைக் காட்டிலும் புதுப்பிக்கப்பட்ட காட்சியகம் முன்று மடங்கு பெரிது என்றும், அதில் 22 பிரிவுகள் இடம்பெற்றிருப்பதாக அதனை நிர்வகிக்கும் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா தெரிவித்தார்.
கடலில் உள்ள பல்வேறு உயிரினங்களையும் பகுதிகளையும் பொதுமக்கள் காட்சியகத்தில் கண்டு மகிழலாம்.
35 மீட்டர் அகலம் கொண்ட கண்ணாடிக்கு முன் நின்று ஆழ்கடல் பகுதியில் நீந்தும் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைப் பொதுமக்கள் கண்டு மகிழலாம்.
பெர்னாமா


