கோலாலம்பூர், மே 27 - ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை சீரமைப்பு தொடர்ந்து நடைபெறும். அத்திட்டம் 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
மேலும், இந்த உதவித் தொகை விநியோக செயல்முறையை தகுதியுடைவர்களுக்கு துல்லியமாகவும் முழுமையாகவும் விநியோகிப்பதை உறுதி செய்வதில் தற்போது முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் எடுத்துரைத்தார்.
ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை இலக்கை செயல்படுத்துவதற்கு MyKad அட்டையை பயன்படுத்துவதற்கான வழிமுறையை அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருவதாக ஹம்சா கூறினார்.
ரஹ்மா அடிப்படை உதவித் தொகை SARA திட்டத்தை செயல்படுத்துவதில் இந்த வழிமுறை பயனுள்ளதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகையை சீரமைக்கும் பணியின் செயல்முறை வலுப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா


