வியட்நாமிய பிரதமர் ஃபாம் மின் சின் உடனான சந்திப்பின்போது இரு நாடுகளும் மதங்களுக்கிடையிலான விவேக பங்காளித்துவ உறவை மேலும் விரிவாக்குவவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்து வருகின்றன என மார்கோஸ் கூறியதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விவேக பங்காளித்துவ உறவை விரிவான விவேக பங்காளித்துவ நிலைக்கு உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எங்கள் அமைச்சர்கள் விவாதித்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன என்று என்று அவர் கூறினார்,
கடந்தாண்டு ஜனவரி மாதம் மார்கோஸ் வியட்நாமுக்கு அரசு முறைப் பயணம் மேற் கொண்டதிலிருந்து இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இச்சந்திப்பில் கட்டிக்காப்போம் , இந்த பங்காளித்துவம் மேலும் உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வர்த்தகம், விவசாயம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
வியட்நாமின் முன்னாள் அதிபர் டிரான் டாக் லாங்கின் சமீபத்திய மறைவுக்கு மார்கோஸ் தனது இரங்கலைத் தெரிவித்தார். மற்றொரு இருதரப்பு சந்திப்பில், மார்கோஸ் மற்றும் லாவோஸ் பிரதமர் சோனெக்ஸே சிபாண்டோன் ஆகியோர் பங்கு கொண்டனர்.
வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, விவசாயம், திறன் மேம்பாடு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகளை அடையாளம் காண அவ்விரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
லாவோஸின் விரைவான பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிட்டு, வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.


