கோலாலம்பூர், மே 27- தலைநகரில் நடைபெறும் 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போதுபிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலிட் அல்-ஹமாட் அல்-சபாவுடன் 20 நிமிட நேர சந்திப்பை நடத்தினார்.
மலேசியாவிற்கும் குவைத்துக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை இந்த சந்திப்பு மையமாகக் கொண்டிருந்தது.
பாலஸ்தீனம், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் உள்ளிட்ட பிராந்தியத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
முன்னதாக, மலேசியாவிற்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்திற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஆவணப் பரிமாற்ற நிகழ்வில் பிரதமர் அன்வாரும் ஷேக் சபா காலிட்டும் கலந்து கொண்டனர்.


