NATIONAL

உள்துறை அமைச்சரின் வாட்ஸ்அப் கணக்கு ஊடுருவல்

27 மே 2025, 10:36 AM
உள்துறை அமைச்சரின் வாட்ஸ்அப் கணக்கு ஊடுருவல்

புத்ராஜெயா, மே 27- உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலின் வாட்ஸ்அப் செயலி கணக்கு பொறுப்பற்ற தரப்பினரின் நேற்று ஊடுருவலுக்கு இலக்கானது உறுதி செய்யப்பட்டது.

மேல் நடவடிக்கைக்காக இவ்விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் நேற்றிரவு  அறிக்கை ஒன்றில் அறிவித்தது.

இது சம்பந்தமாக, சைபுடின் நசுத்தியோன் எனக் கூறிக்கொள்ளும் அழைப்புகள், குறிப்பாக நிதி விஷயங்கள் அல்லது நியமனங்கள் பற்றிய தகவல்களால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று நினைவூட்டப்படுகிறது.

இந்த ஊடுருவல்காரர்களின் பொறுப்பற்ற செயல்களுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மேலும் இதுபோன்ற மோசடிகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

பல்வேறு சமூக ஊடகப் பயன்பாடுகளை இலக்காகக் கொண்ட மோசடி கும்பல்கள் குறித்து பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்கவும் இத்தகைய ஊடுருவல் செயல்களை அதிகாரிகளிடம் தெரிவிக்கவும் நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.