புத்ராஜெயா, மே 27 - 28 முதல் 32 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு Tdap நோய்த்தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது.
tetanus, difteria, pertusis போன்ற நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் இந்த Tdap தடுப்பூசி, தாய்மார்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க நாடு முழுவதும் உள்ள அனைத்து KKM ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி திட்டம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பகால பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள், தாய் அல்லது சேய்க்கு எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தாமல், பயன்படுத்துவதற்குக் பாதுகாப்பானது மற்றும் ஆக்கப்பூர்வமானது என்பது அனைத்துலக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த Tdap தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை; குழந்தையின் பாதுகாப்பை முன்னிறுத்தி அதனை எடுத்துக் கொள்ள கர்ப்பிணிகள் ஊக்குவிக்கப்படுவதாக டாக்டர் சுல்கிஃப்ளி விளக்கினார்.


