NATIONAL

ஆண்டு இறுதிக்குள் ஆசியானின் முழு உறுப்பினராக தீமோர் லெஸ்தே விருப்பம்

26 மே 2025, 8:45 AM
ஆண்டு இறுதிக்குள் ஆசியானின் முழு உறுப்பினராக தீமோர் லெஸ்தே விருப்பம்

கோலாலம்பூர், மே 26 —இவ்வாண்டு இறுதிக்குள், முடிந்தால் வரும்  அக்டோபர் மாதவாக்கில் ஆசியான் அமைப்பின் முழு உறுப்பினராக ஆவது குறித்து திமோர் லெஸ்தே நம்பிக்கை கொண்டுள்ளது

இந்த செயல்முறையில் நம்பிக்கை தெரிவித்த தீமோர் லெஸ்தே பிரதமர் கே ராலா சனானா குஸ்மாவோ, உறுப்பினர் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் தனது நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறினார்.

ஆசியான் உறுப்பினர்களிடமிருந்து பரவலாக  ஆதரவு இருப்பதால் இந்த செயல்முறையை ஆண்டு இறுதிக்குள், முடிந்தால் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க  இயலும் என நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்து  பெரும்பாலான நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளோம் என்று அவர் இன்று 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு  நடத்தப்பட்ட 14வது ஆசியான்-ஏ.ஐ.பி.ஏ. (ஆசியான் இடையிலான நாடாளுமன்றக் கூட்டம்) தலைவர்களின் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்பு  நடந்த நேர்காணலின் போது செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆசியான் உறுப்பினர் பதவிக்கு முதன் முதலில் விண்ணப்பித்த தீமோர் லெஸ்தே,  கடந்த 2022 ஆம் ஆண்டு உயர்மட்டக் கூட்டங்களில் பார்வையாளராக பங்கேற்கும் அந்தஸ்தைப் பெற்றது. இருப்பினும், அதன் முழு இணைப்பு இன்னும் பரகசீலனையில் உள்ளது.

ஆசியானில் இணைவது வெறும் பொருளாதார ஆதாயங்களை சார்ந்தது மட்டுமல்ல. மாறாக, பிராந்திய அரங்கில் தீமோர் லெஸ்தேவின் குரலைப் எதிரொலிக்கச் செய்வதும் ஆகும் என்று தீமோர் லெஸ்தே வெளியுறவு அமைச்சர் பெண்டிட்டோ டோஸ் சாண்டோஸ் ஃப்ரீடாஸ் நேற்று தெரிவித்தார்.

பொருளாதார நன்மைகளுக்கு மட்டுமின்றி  இந்தோனேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான நாட்டின் கேந்திர முக்கியத்துவம்  வாய்ந்த நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதற்கும் மொத்தம்14 லட்சம் மக்களைக் கொண்ட இந்த சிறிய நாட்டிற்கு முழு உறுப்பினர் சேர்க்கை மிக முக்கியமானது என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.