பகாவ், மே 26 - சனிக்கிழமை பிற்பகல் நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஃபெல்டா லூய் பாராட்டில் வீசிய புயலால் 83 வீடுகள் சேதமடைந்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது தவிர கம்போங் பாரு ஆயர் ஈத்தாமில் 9 வீடுகளும் கம்போங் டூசாட்டில் ஒரு வீடும் சேதமுற்றன.
இதற்கு முன்பும் இங்கு புயல் வீசியுள்ளது; ஆனால் இவ்வளவு வலுவானதாக இல்லை. ஆக கண்டிப்பாக இது சூறாவளி தான் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
இவ்வேளையில், லூய் பாராட் தேசிய இடைநிலைப் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியின் உணவு மாடமும் அதில் சேதமுற்றது.
வியாழக்கிழமை பள்ளி விடுமுறை தொடங்குவதால், உணவு மாடம் மூடப்பட்டு பழுது பார்க்கப்படும் என அப்பள்ளி நிர்வாகம் கூறியது.
இந்தப் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.


