NATIONAL

மாறி வரும் உலகளாவிய இயக்க ஆற்றலுக்கு மத்தியில் ஆசியான் மாநாடு, அன்வார் தொடங்கி வைத்தார்

26 மே 2025, 4:54 AM
மாறி வரும் உலகளாவிய இயக்க ஆற்றலுக்கு மத்தியில் ஆசியான் மாநாடு, அன்வார் தொடங்கி வைத்தார்

கோலாலம்பூர், மே 26- இந்த பிராந்தியத்தின் உயரிய கொள்கை வகுப்பு அமைப்பான ஆசியானின் உச்சநிலை மாநாடு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும் நிலையில் அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம் மற்றும் உலக ஒழுங்கு முறை மாற்றத்திற்கு மத்தியில் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு உறுப்பு நாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் 46 வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முதன்மை அமர்வை துவக்கி வைத்து உரையாற்றிய அன்வார், விதிகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக அமைப்பு தன்னிச்சையான மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் சிதைக்கப்படுகிறது எனக் கூறினார்.

பல தரப்பு வாதம் உடைவதற்கு நாம் சாட்சியாக இருப்பதால் பாதுகாப்புவாதம் மீண்டும் எழுச்சி பெறுகிறது. என்று அமெரிக்காவின் அண்மைய பரஸ்பர வரி விதிப்பு மற்றும் உலகளாவிய வர்த்தக அமைப்பில் ஏற்பட்டு வரும் அழுத்தம் ஆகியவைற்றை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் அவர் தெரிவித்தார்.

இத்தகைய எதிர் காற்றுகள் பலமாக இருந்த போதிலும் ஆசியானின் மீட்சியில் தாம் நம்பிக்கை  கொண்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார். பொருளாதாரப் பணிக் குழுவின் விரைவான உருவாக்கம் அந்த கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய ஒழுங்கு முறையில் ஆசியானின் அதிகரித்து வரும் பொருத்தத்தையும் அன்வார் தனதுரையில் சுட்டிக்காட்டினார். ஆசியான் சமூகத்தின் பத்தாம் ஆண்டு நிறைவையும் அந்த அமைப்பிற்கு வழிகாட்டியாக விளங்கக் கூடிய  20 ஆண்டு தொலைநோக்குக்கு வழிகாட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் அவர் உதாரணம் காட்டினார்.

நிறுவப்பட்ட போது அடிப்படையாகக் கொள்ளப் பட்ட அமைதி, நிலைத்தன்மை, வர்த்தகம், மூலதனம் மற்றும் மக்களின்  சுதந்திரமான இயக்கம் ஆகியவற்றை ஆசியான் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.