கோலாலம்பூர், மே 26 - முன்பு கோலாலம்பூர் கால்பந்து அணிக்கு விளையாடியவரான T. கோபிநாத் திடீர் மாரடைப்பு காரணமாக 51 வயதில் நேற்று காலமானார்.
1992 முதல் கோலாலம்பூருக்கு விளையாடி 1993 மற்றும் 1994-ஆம் ஆண்டுகளில் FA கிண்ணத்தை வென்றார் கோபிநாத். எனினும் தனது கால்பந்து வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை நெருங்கும் முன்னரே காயப் பிரச்சனை அவர் அவதியுற்றார்.
இதனால், 19 தடவை முட்டி காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, 1999-ல் வெறும் 25 வயதிலேயே கால்பந்தில் இருந்து கோபிநாத் ஓய்வுப் பெற்றார். ஓய்வுப் பெறுவதற்கு முன் சிறிது காலம் அவர் பேராக் அணிக்கும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


