NATIONAL

பாலஸ்தீனத்தில் அனைத்துலகச் சட்டம் பின்பற்றப்பட வேண்டும்- ஆசியான் வலியுறுத்து

26 மே 2025, 1:54 AM
பாலஸ்தீனத்தில் அனைத்துலகச் சட்டம் பின்பற்றப்பட வேண்டும்- ஆசியான் வலியுறுத்து

கோலாலம்பூர், மே 26 - காஸாவில் அனைத்துலக மனிதாபிமானச்

சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதோடு அவை பின்பற்றப்படவும்

வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஆசியான் தெளிவாகவும்

உறுதியாகவும் வெளிப்படுத்தியது.

ஆசியான் தெளிவாக உள்ளது. காஸாவிலும் பாலஸ்தீனத்திலும்

மனிதாபிமான அம்சங்களும் அனைத்துலக சட்டங்களும் மதிக்கப்படுவதை

உறுதி செய்வதற்கு ஆசியான் தனது முழு ஆதரவை புலப்படுத்துகிறது

என்று பிலிப்பைன்ஸ் வெளியுறவுச் செயலாளர் என்ட்ரிக் ஏ மனாலோ

நேற்று ஊடகங்களிடம் கூறினார்.

நேற்று இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில்

நடைபெற்ற ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (ஜி.சி.சி.)

வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிலிப்பைன்ஸ் தலைமை தாங்கிய

நிலையில் பாலஸ்தீனம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மனிதாபிமான உதவிகள் எந்த தங்கு தடையுமின்றி செல்வதை உறுதி

செய்யாவிடில் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மேலும் அதிகரிக்கும்

என்று கிழக்கு அருகாமை பாலஸ்தீன அதிகளுக்கான ஐக்கிய நாடுகள்

சபையின் உதவி மற்றும் பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் இஸ்ரேல் விதித்து வரும்

கட்டுப்பாடுகள் காரணமாக 24 லட்சம் மக்கள் ஏறக்குறைய பஞ்சத்தால்

வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டார் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த என்பது நாட்களில் 58 பேர் சத்துணவு குறைபாடு காரணமாக

உயரிழந்துள்ளனர். மேலும் பெரும் எண்ணிக்கையிலான சிறார்கள்

உள்ளிட்ட 242 பேர் உணவு மற்றும் மருந்துகள் இல்லாத நிலையில்

மரணமடைந்துள்ளனர்.

ஆசியான் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் குறித்து கருத்துரைத்த

மிலானோ, 2024-2028 ஆசியான்-ஜி.சி.சி. செயல்வடிவ ஒத்துழைப்பு

அமலாக்கம் சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் கலாசாரத்தில் ஆசியான்-

ஜி.சி.சி. ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடிய விரிவான திட்டமாக இந்த

செயல்வடிவம் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.