MEDIA STATEMENT

சவால் மிக்க அடுத்த 16 வது பொதுத் தேர்தலை  எதிர்கொள்ள  கெஅடிலான்  தயாராக வேண்டும்,

25 மே 2025, 6:02 AM
சவால் மிக்க அடுத்த 16 வது பொதுத் தேர்தலை  எதிர்கொள்ள  கெஅடிலான்  தயாராக வேண்டும்,
சவால் மிக்க அடுத்த 16 வது பொதுத் தேர்தலை  எதிர்கொள்ள  கெஅடிலான்  தயாராக வேண்டும்,

ஜோகூர் பாரு, மே 25: மக்கள் நீதிக் கட்சியின் (KEADILAN) துணைத் தலைவர், அனைத்து தலைவர்களையும் பிரதிநிதிகளையும் நீதியை நிலை நிறுத்த, குறிப்பாக அரசாங்கத்தின் ஒரு பகுதியான  நமது பங்கினை  சிறப்பாக ஆற்ற பொருத்தமாக  நாம்  என்றும்  இருப்பதை உறுதி செய்வதற்கான கட்சியின் போராட்டத்தின் மைய இலட்சியத்தை  தொடர்ந்து பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

16-வது பொதுத் தேர்தலை எதிர் கொள்வதில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் அனைத்து தரப்பும் தங்கள் முயற்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், மக்கள் நலனுக்கான போராட்டமே  நமது முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்கு கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும்   நூருல் இஸ்ஸா அன்வர் வலியுறுத்தினார்.

"நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு அரசாங்கமாக ஒரு சவால்மிக்க காலகட்டத்தில்  கட்சியை கொண்டு செல்ல  வேண்டும். அதற்கான  இலட்சியத்தை, சக்தியை வலுப்படுத்த வேண்டும்".

"பொதுத் தேர்தலுக்கு 24 மாதங்களுக்கு முன்பே, பெண்கள் மற்றும் இளைஞர்களின் அதிகாரத்தையும் குரலையும் முழுமையாகப் பயன்படுத்த விரும்பும்  நாம், அடுத்த தேர்தலில்  குறைந்த பட்சம் 40 சதவீத இடங்களை பெண்கள் மற்றும் இளைஞர்கள் பிரதிநிதிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள பெர்சாடா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற கெஅடிலான்  தேசிய காங்கிரஸின் நிறைவு அமர்வில் பேசிய அவர், கட்சியின் சீர்திருத்தம் வெற்றியை நோக்கமாகக் கொண்டு இருப்பது மட்டுமல்லாமல், நீண்ட கால போராட்டத்திற்கு திடமான அடித்தளத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

."நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்போதே இந்த சீர்திருத்த இயக்கத்தைத் தொடர முடியும்". "போராட்டம் என்பது வெற்றியைப் பின்தொடர்வது மட்டுமல்ல, போராட்டத்தின் குறிக்கோள்கள் பொருத்தமானதாகும் அர்த்தமுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும்" என்று அவர் கூறினார்.

ஒரு கட்சியின் முக்கிய பலம் உயர்மட்டத் தலைமையைப் பொறுத்தது மட்டுமல்லாமல், பெரும்பாலும் பிற்பட்ட அடிமட்ட மற்றும் களப்பணியாளர்களின் பங்கையும் சார்ந்துள்ளது, அதேசமயம் அவர்கள் உண்மையில் கட்சியின் வெற்றியின் தூண்களாகும் என்றும் நூருல் இஸ்ஸா வலியுறுத்தினார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் மிகவும் உணர்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றும் அடிமட்ட மட்டத்திலிருந்து வரும் குரல்களைக் கேட்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.