ஜோகூர் பாரு, மே 24- ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்.ஏ.சி.சி.)
வழிநடத்தும் காலக்கட்டத்தில் ‘பெரும் தவுக்கே‘களை எதிர்கொள்வதில்
கொண்டிருக்கும் தைரியம் காரணமாக ஊழல் தடுப்பு ஆணையத்தின்
ஆணையர் பதவிக்கான டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் ஒப்பந்தம்
நீடிக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் இவ்விவகாரத்தை எழுப்பிய
போதிலும் பெரிய அளவிலான ஊழல்களை அம்பலப்படுத்துவதில் அந்த
ஆணையம் காட்டி வரும் வழக்கத்திற்கு மாறான துணிச்சல் இந்த முடிவு
நியாயமானது என்பதை புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது தொடர்பில் பலர்
விவாதிப்பதோடு எதிர்க்கட்சிகளும் அதிகம் குரல் கொடுத்து வருகின்றன.
எழுப்பப்படும் குறைகூறல்களை நான் நிராகரிக்கவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் எம்.ஏ.சி.சி.யின் மேம்பாடுகளை
கவனிக்கையில் அந்த ஆணையம் முதன் முறையாக துணிச்சலுடன்
பெரும் தவுக்கேகளை கை வைத்துள்ளது.
இதுதான் எனது கருத்து. நான் அமைச்சரவை நண்பர்களுடன் பேசி
நாளையே (அஸாம் பாக்கியை) மாற்ற முடியும். கோடிக்கணக்கான
வெள்ளி செல்வத்தைதக் கொண்டிருக்கும் பெரிய தவுக்கேகளை கை வைக்கும்
தைரியம் புதிதாக வருவோருக்கு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு
இல்லை என்று அவர் சொன்னார்.
வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
துணிச்சலாக நடவடிக்கை எடுக்கும் போது அந்த எம்.ஏ.சி.சி.க்கு
வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத விமர்சகர்கள் பழிவாங்கும்
நோக்கத்துடன் அந்த அமைப்பு செயல்படுகிறது என குற்றஞ்சாட்டுவது
மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என அவர் சொன்னார்.
வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அவர்கள் இதனை
ஆதரிக்கின்றனர். நமக்கு யாரும் ஆதரவு தெரிவிப்பதில்லை. நடவடிக்கை
எடுத்தால் அது பழிவாங்கும் செயல் என கூறுகின்றனர் என்றார் அவர்.
இவ்வாண்டு மே மாதம் 13ஆம் தேதி தொடங்கி 2026 மே மாதம் 12ஆம்
தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ
சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் முன்னதாக அறிவித்திருந்தார்.


