கோலாலம்பூர், மே 23 - மே 24 தொடங்கி 26 வரை கெப்போங் மற்றும் சாலாக் செலாத்தான் இடையில் சமிக்ஞை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், KTM Komuter மற்றும் ETS இரயில் சேவைகள் பாதிக்கப்படவுள்ளன.
Pulau Sebang-Batu Caves-Pulau Sebang மற்றும் Tanjung Malim-KL Sentral-Tanjung Malim ஆகியவை பாதிக்கப்படும் Komuter இரயில் வழித்தடங்களாகும்.
இதனால் 50 நிமிடங்களுக்கு தாமதம் ஏற்படலாம் என்பதை தெரிவித்துக் கொள்வதாக, KTMB நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
எந்தவொரு சூழலிலும் பயணிகளுக்கு உதவ இரயில் நிலையங்களில் பணியாளர்கள் தயாராக இருப்பர்.
பயணிகளும் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, KTMB செயலியில் MyRailtime நிகழ்நேர வசதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த தற்காலிக சேவைத் தடங்கலானது, இரயில் போக்குவரத்தின் பாதுகாப்பையும் ஆக்கப்பூர்வ சேவையை வழங்குவதை உறுதிச் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என KTMB விளக்கியது.


