NATIONAL

புதிய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பு - பரிந்துரையை கெஅடிலான் பரிசீலிக்கும்

23 மே 2025, 9:24 AM
புதிய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பு - பரிந்துரையை கெஅடிலான் பரிசீலிக்கும்

ஜோகூர் பாரு, மே 23 - புதிய உறுப்பினர்களை பொது தேர்தல் மற்றும் கட்சித் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கும்  கெஅடிலான் கட்சி தேசியத் தலைவரின் அதிகாரத்தை ரத்து செய்யும் பரிந்துரை குறித்து கட்சிக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று அதன் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாங்கள் கூட்டத்தில் (பரிந்துரையை) முன்வைப்போம். ஏனென்றால் அன்றைய தினம் எனது முடிவு எம்.பி.பி. (மத்திய தலைமைத்துவ மன்றம்) கூட்டத்தில் எடுக்கப்பட்டது.  (போட்டியிடும் உறுப்பினர்களுக்கு) அதை நான் கடினமாக்க விரும்பவில்லை என்று சொன்னேன்.

அதனால்தான் தலைமையகம் எனக்கு (வேட்பாளர் விண்ணப்பப் பட்டியலை) அனுப்பியபோது நான் அனைத்தையும் அங்கீகரித்தேன். நான் (பட்டியலின்) ஒரு பகுதியை அங்கீகரித்திருந்து  மற்ற பகுதியை அங்கீகரிக்காமல் விட்டிருந்தால் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

எனவே, திவாலானவையா அல்லது தவறான நடத்தை பிரச்சினைகள் உள்ளவையா என அனைத்தையும் தலைமையகம் பரிசோதித்த பிறகு என் மேசைக்கு வந்த அனைத்து விண்ணப்பங்களையும் அங்கீகரித்தேன். என்னைப் பொறுத்தவரை அதில்  எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறினார்.

இன்று பெர்ஜெயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நடைபெற்ற  கெஅடிலான் கட்சித

யின்  மத்திய தலைமைத்துவத்துவ தேர்தலில்  வாக்களித்த பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னதாக, உண்மையான போராட்டத்தை விட பதவிகள் அல்லது அரசியல் ஆதாயத்தில் அதிக ஆர்வமுள்ள சந்தர்ப்பவாதிகளால் கட்சி ஆதிக்கம் செலுத்தப்படுவதைத் தடுக்க கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் அதிகாரம்  ரத்து செய்யப்பட வேண்டும் என்று

கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லி பரிந்துரைத்திருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.