ஷா ஆலம், மே 23 - கடந்த வாரம் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரால் தொடக்கி வைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வான புதிய ஷா ஆலம் விளையாட்டு அரங்கக் கட்டுமானம் பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது.
ஷா ஆலம் அரங்கத்தின் சிறப்புகள் குறித்து எம்பிஐ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டி.எஸ்.சாய்போலியாசன் எம் யூசோப் மற்றும் MRCB குழும நிர்வாக இயக்குநர் டத்தோ இம்ரான் சலீம் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இந்த அரங்கம் சுமார் 35,000 முதல் 45,000 பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டுகளை கண்டுகளிக்கும் வசதிகளை கொண்டிருக்கும். மேலும் பல்வேறு நிகழ்வுகளுக்கான மைதானங்களையும் உள்ளடக்கியது.
அதனுடன் விளையாட்டாளர்கள் உடை மாற்றும் அறைகள், பத்திரிகையாளர் சந்திப்பு அறை மற்றும் வீடியோ உதவி நடுவர் (VAR) அறைகளை கொண்டிருப்பதுடன், புதிய அரங்கத்தில் கால்பந்து மைதானம் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க உயர்த்தப்பட்ட தளத்துடன் கூடிய மூன்று நிலை வடிவமைப்பு காத்திருப்பு சுரங்கப்பாதை வெப்பக் கட்டுப்பாடு மற்றும் இயற்கை விளக்குகளுக்கான சிராமிக் கூரை, குளிரூட்டி வசதிகளுடன் இயற்கை காற்றோட்ட அமைப்புடன் கூடிய பார்க்கிங் இடத்தையும் கொண்டிருக்கும் என அவர்கள் விளக்கினர்.


