ஷா ஆலம், மே 23 - ஷா ஆலம் அரங்கம் வெறும் விளையாட்டு வசதியை மட்டும் கொண்டிருக்கவில்லை. இது பொழுதுபோக்கு முதல் பொருளாதார உருவாக்கம் வரை அனைத்து மட்ட மக்களுக்கும் ஒரு பல்நோக்கு தளமாக விளங்கும்.
இந்த அரங்கம் 2029 ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட கட்டுமானத்தில், பார்க்கிங் பிளாசா மற்றும் எல்ஆர்டி 3 (LRT3) டிரான்சிட் உடன் இணைக்கும் ஒருங்கிணைந்த முனையம் ஆகியவை அடங்கும்.
மேலும், இரண்டாம் கட்ட கட்டுமானத்தில் விளையாட்டுப் பிரிவுகள் மற்றும் 10,000 பேர் இருக்கக்கூடிய உட்புற தியேட்டர் போன்ற அமசங்கள் அடங்கும். இது வணிக இடம் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளையும் கொண்டிருக்கும்.
இறுதி கட்டமாக, 2029ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு ஹோட்டல் உருவாக்கப்படும். இவையாவும் ஷா ஆலம் அரங்கத்தை விளையாட்டு, கலாச்சாரம், சமூகம் மற்றும் தொழில்முனைவோருக்கான ஒருங்கிணைந்த மையமாக மாற்றும்


