காஜாங், மே 23 - பாங்கியில் பூட்டப்படாத காரிலிருந்து பேக் திருடுபோன சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்டவர் புகாரளிக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
டிக் டோக்கில் வைரலாகியுள்ள இச்சம்பவ வீடியோவை தாங்களும் பார்த்ததாக, காஜாங் காவல்துறை தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
வீடியோவில் அக்காரை ஓட்டி வந்த பெண், காரை பூட்டாமல் வெளியே போனதும், பின் கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன் ஒருவன், பூட்டப்படாத காரிலிருந்து பேக்கைத் திருடுவது பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் பாங்கியில் நடந்ததாகக் கூறப்பட்டாலும், பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் வரவில்லை மற்றும் ஏற்பட்ட இழப்பு குறித்த தகவலும் இல்லை.
எனவே சம்பந்தப்பட்டவர் புகாரளித்தால் விசாரணையை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என நாஸ்ரோன் தெரிவித்தார்.


