ஹெமில்டன், மே 22 - இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள
கீரிம் ஷாலோம எல்லைக் கடப்பு வழியாக காஸா தீபகற்பத்திற்கு
உதவிப் பொருள்கள் சிறிய எண்ணிக்கையிலான ஏற்றிய டிரக்குகள்
மட்டுமே செல்ல முடிவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று
கூறியது.
எனினும், பாதுகாப்பு காரணங்களால் அந்த உதவிப் பொருள்களையும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க முடியவில்லை என்று அந்த
பாதுகாப்பு அமைப்பை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி
வெளியிட்டுள்ளது.
எல்லையைத் தாண்டிய அனைத்து உதவிப் பொருள்களும் கீரீம்
சாலோமில் உள்ள பொருளைகளை இறக்கும் இடத்தில்
வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பேச்சாளரான ஸ்டீபன் ட்ஜுரிக் கூறினார்.
இஸ்ரேல் கடந்த 11 வாரங்களாக தடைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்
காஸா மக்கள் உதவிக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
எனினும், குறுகலான, நெரிசல்மிக்க மற்றும கொள்ளை போன்ற
சம்பவங்கள் நிகழக்கூடிய அபாயம் நிறைந்த வழியை மட்டுமே
பயன்படுத்த ஐ.நா.குழுவினருக்கு இஸ்ரேலிய இராணுவம் அனுமதி
வழங்கியுள்ளது என அவர் சொன்னார்.
முக்கியமாகத் தேவைப்படக்கூடிய எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள்
காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
உதவிப் பொருள்களை ஏற்றிய டிரக்குகள் தயார் நிலையில் இருந்த
போதிலும் அவற்றை அனுப்ப முடியாத நிலையில் தாங்கள் உள்ளதாக
அவர் தெரிவித்தார்.
உதவிப் பொருள்கள் கீரீம் ஷாலோம் பகுதியிலிருந்து வெளியேறியது
தொடர்பான எந்த தகவலும் ஜெருசலத்தில் உள்ள எங்களின் சக
பணியாளர்களிடமிருந்து கடந்த புதன்கிழமை வரை கிடைக்கவில்லை
என்று அவர் குறிப்பிட்டார்.
நிலைமை தொடர்ந்து மாற்றம் கண்டு வருவதாகக் கூறிய அவர், உதவிப்
பொருள் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய கீரீம்
ஷாலோமிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த வழியை அடையாளம்
காண ஐ.நா. இஸ்ரேலுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.


