ஜோகூர் பாரு, மே 22 - நேற்று மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்குச் (UTM) சொந்தமான பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உட்பட 6 மாணவர்கள் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பினர்.
தீயணைப்புத்துறை விரைந்து செயல்பட்டதால் தீயை உடனடியாக அணைக்க முடிந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராயவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் பலக்லைக்கழகம் தெரிவித்தது. .


