குவா மூசாங், மே 22 - இங்குள்ள பிஹாய் போஸ்டில் உள்ள தெட்ண்ட்ரிக் ஆற்றை நான்கு சக்கர இயக்க வாகனத்தில் கடக்க முயன்ற ஓட்டுநர் ஒருவர் வலுவான நீரோட்டத்தில் சிக்கி மூழ்கி இறந்ததிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தமது தரப்பினருக்கு புகார் கிடைத்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குவா மூசாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
ஆம், இச்சம்பவம் குறித்த புகார் எங்களுக்கு புகார் கிடைத்துள்ளது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இதுகுறித்து காவல்துறை இன்னும் விசாரித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து உயிர்த் தப்பிய இரண்டு பயணிகள் இந்த சம்பவம் குறித்து தனக்குத் தகவல் தெரிவித்ததாக மற்றொரு நான்கு சக்கர இயக்க வாகன ஓட்டுநரான 53 வயதான மஸ்லான் முகமது குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் மாலை 5.30 மணிக்கு அந்த ஆற்றை அடைந்தனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும், போஸ் பிஹாய், கம்போங் பஹோங்கில் உள்ள கொங்சி வீட்டிற்கு திரும்புவதற்கு தாமதம் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக நீரோட்டம் இன்னும் வேகமாக இருந்தபோதிலும் பாதிக்கப்பட்ட வாகனமோட்டி பயணத்தை தொடர்வதில் உறுதியாக இருந்தார் என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
அந்த வாகனத்திலிருந்த பயணிகளில் ஒருவர் ஜன்னலை உடைத்து கரைக்கு நீந்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது காலில் காயம் ஏற்பட்டது என மஸ்லான் சொன்னார்.
சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது ஆற்றில் வாகனத்தைக் கண்டுபிடித்ததாகவும், ஆனால் ஓட்டுநரை எங்கும் காணவில்லை என்றும் அவர் கூறினார்.


