கோலாலம்பூர், மே 21 - இன்று காலை 10 மணி முதல் 2025/2026 அமர்வுக்கான கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்திற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் முடிவுகள் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பம் செய்த மாணவர்கள் https://matrikulasi.moe.gov.my என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெட்ரிகுலேசன் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் இன்று முதல் ஜூன் 21 வரை மேல்முறையீடு செய்யலாம்.
மெட்ரிகுலேஷன் திட்டம் தொடர்பான விளக்கங்கள் பெறுவதற்கான முகப்பிட சேவை இன்று முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் E வளாகத்தின் Block 15 தொகுதியில் அலுவலக நேரத்தில் மட்டுமே திறந்திருக்கும்.


