MEDIA STATEMENT

வெ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

20 மே 2025, 9:12 AM
வெ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

பத்து பஹாட், மே 20 -  இங்குள்ள சுங்கை அயாம் கடல் பகுதியில் கடந்த  வெள்ளிக்கிழமை  அதிகாலை 1.00 மணியளவில் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.)

மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் ஒரு கோடி வெள்ளி   மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் என்று நம்பப்படும் போதைப்பொருளைக் கடத்தும் முயற்சி  முறியடிக்கப்பட்டது

கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட  மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல் நடவடிக்கை  இதுவென மாநில கடல்சார் நடவடிக்கை பிரிவின் துணை இயக்குநர் கேப்டன் காமா அஸ்ரி காமில் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு ஃபைபர் கிளாஸ் படகின் நடமாட்டம் இருப்பது குறித்து உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரோந்துப்படகு ஒன்று அங்கு  அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார்.

சோதனை செய்யும் நோக்கில் அந்த படகை  இடைமறிக்க ரோந்து படகு முயன்றது. ஆனால்  அமலாக்க அதிகாரிகளின் வருகையை உணர்ந்த இரு  சந்தேக நபர்கள் ஆழமற்ற பகுதியை நோக்கி  படகை  வேகமாகச் செலுத்தி பின்னர்  நீரில் குதித்து சதுப்பு நிலக் காட்டுக்குள் தப்பிச் சென்றனர் என்றார் அவர்.

200 குதிரைத்திறன் கொண்ட  இயந்திரம் பொருத்தப்பட்ட அந்த படகை ஆய்வு செய்த அதிகாரிகள்மெத்தம்பேட்டமைன் என்று நம்பப்படும் படிகப் பவுடர்  நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பொட்டலங்கள் அடங்கிய 12 சாக்குகளை  கண்டுபிடித்தனர் என்று அவர் இன்று பத்து பஹாட் கடல்சார் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

கைப்பற்றப்பட்ட  படகு உள்ளிட்ட பொருட்கள் மேல் நடவடிக்கைக்காக பத்து பஹாட் கடல்சார் மண்டலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.  இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

எல்லை தாண்டிய குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அமலாக்கத்தை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று காமா கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.