ஜோர்ஜ் டவுன், மே 20 - இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்தது என நம்பப்படும் வெடிக்கும் தன்மை கொண்ட வெடி குண்டு ஒன்று தஞ்சோங் தோக்கோங், ஜாலான் ஶ்ரீ தஞ்சோங் பினாங்கில் உள்ள ஒரு கட்டுமான பகுதியில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து இரவு 9.42 மணிக்குத் தகவல் கிடைத்ததாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முகமது தெரிவித்தார்.
பினாங்கு மாநில காவல் துறை தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அந்த வெடிகுண்டை ஆய்வு செய்து செயலிழக்கச் செய்வதற்காக அழைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
ஆய்வின் போது அந்த பொருள் இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காமல் போன யு.எக்ஸ்.ஒ. வகை வெடிகுண்டு என்பதை வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடம் பாதுகாப்பானது என்பதை வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு
ஆய்வு செய்து உறுதிப்படுத்தியதாகவும் அந்த வெடிகுண்டை அழிக்கும் பணி இன்று மேற்கொள்ளப்படும் என்றும் அப்துல் ரோசாக் கூறினார்.


