கப்பளா பாத்தாஸ், மே 20- கோல மூடா பெனாகா, கோத்தா அவுரில் நேற்று மாலை ஆற்றில் தவறி விழுந்ததாக நம்பப்படும் 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டான்.
இச்சம்பவம் தொடர்பில் தமது தரப்புக்கு இரவு 7.24 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து கோல மூடா தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து எட்டு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
இந்த சம்பவத்தில் 11 வயது சிறுவன் ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டான். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அச்சிறுவனை பொதுமக்கள் மீட்கப்பட்டுவிட்டனர் என்று அவர் தேற்று மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எனினும், அச்சிறுவனின் உயிர் பிரிந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்த மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக கூறிய அவர், அவரது உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகச் சொன்னார்.


