பேங்கோக், மே 19 - ஜனவரி 1 முதல் மே 14 வரை தாய்லாந்தில் கோவிட்-19 தொற்றால் 71,067 நபர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், 19 இறப்புகள் பதிவாகியுள்ளன.
தாய்லாந்தில் கோவிட்-19 தொற்று குறைந்திருந்த சமயத்தில் சாங்கிரான் விடுமுறையால் தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்ததாகவும் அந்நாட்டின் தகவல் மையம் விளக்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தாய்லாந்தில் ஒமிக்ரான் XEC எனும் புதிய தொற்றும் அதிகரித்து வருவதாக மருத்துவ அறிவியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், அறிகுறிகளைக் கண்காணித்து, அடிக்கடி கைகளைக் கழுவவும், நெரிசலான பகுதிகளிக்கு முகக்கவசத்தை அணிந்து செல்லவும் மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


