நியூ யோர்க், மே 19 - அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரின் எலும்பு வரை புற்றுநோய் பரவியிருப்பதாகப் பைடன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கைத் தெரிவித்தது.
சிறுநீர் தொற்று அறிகுறிகள் காரணமாக 82 வயது பைடன் கடந்த வாரம் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை அன்று புற்றுநோய் உறுதியானது.
10-க்கு 9 என்ற குறியீட்டில் மிகவும் தீவிரமான புற்றுநோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அது வேகமாகப் பரவும் அபாயத்தைக் கொண்டது.
இந்நிலையில் எந்த மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்வது என்பது பற்றிஆவரின் குடும்பத்தார் கலந்தாலோசித்து வருகின்றனர்.
இவ்வேளையில் பைடனின் புற்றுநோய் தகவல் வெளியானதும், நடப்பு அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் கவலையும் வருத்தமும் தெரிவித்தார். விரைவிலேயே அவர் குணமடைய பிராத்திப்பதாக டிரம்ப் சொன்னார்.


