கோலாலம்பூர், மே 19 - ஹலால் இறைச்சி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு
ஏதுவாக வியூகப் பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது தொடர்பில்
ஆஸ்திரேலியா மலேசியாவுடன் பேச்சு நடத்தி வருகிறது.
ந்த பேச்சுவார்த்தையின் முடிவு விவசாய ஒப்பீட்டு நன்மையின்
அடிப்படையில் மட்டுமல்லாது விவசாயம் சார்ந்த தொழில்நுட்பம் மற்றும்
ஹலால் தொழில்துறை சார்ந்த மலேசியாவின் அபிலாஷைகளிலும்
முக்கியமானதாக இருக்கும் என்று மலேசியாவுக்கான ஆஸ்திரேலிய அரச
தந்திரி டேனியல் ஹெய்னேக் கூறினார்.
இத்துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அண்மைய காலமாக நடத்தி
வரும் பேச்சுவார்த்தையின் வாயிலாக விவேக பங்காளித்துவத்தை இறுதி
செய்வோம் என அவர் சொன்னார்.
இன்று பெர்னாமா டிவியில் ஒளியேறிய ஆஸ்திரேலியா-மலேசியா உறவு-
மாறி வரும் இந்தோ பசிபிக் பங்காளிகள் எனும் நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜக்கிம் எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையில் பதிவு பெற்ற
சுமார் 17 ஆஸ்திரேலிய இறைச்சி ஏற்றுமதியாளர்கள் உயர் ஹலால் தர
நிர்ணயத்தைப் பூர்த்தி செய்து மலேசியாவுக்கு இறைச்சி ஏற்றுமதி
செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு ஆஸ்திரேலியா 38,220 டன் ஹலால் செம்மறியாட்டு இறைச்சி,
13,511 டன் ஹலால் மாட்டிறைச்சியை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்தது.
இதன் மதிப்பு முறையாக 24 கோடிய 92 லட்சத்து 60 ஆயிரம்
ஆஸ்திரிலியா டாலர் மற்றும் 12 கோடியே 8 லட்சத்து 30 ஆயிரம்
டாலராக உள்ளதை தரவுகள் காட்டுகின்றன.
தென்கிழக்காசியாவில் இந்தோனேசியாவுக்கு அடுத்து இரண்டாவது மிகப்
பெரிய சிவப்பு இறைச்சி ஏற்றுமதி சந்தையாக மலேசியா விளங்குகிறது.


