கிள்ளான், மே 19: நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லாமன் ஸ்ரீ கெராயோங்கில் உள்ள பாடாங் அவாமில் நடைபெற்ற கிள்ளான் ஆரோக்கியமான மற்றும் வளமான சமூகத் திட்டத்தில் சுமார் 1,000 பங்கேற்றனர்.
ஏரோபிக்ஸ், 10,000 அடிகள் நடைபயிற்சி, மறுசுழற்சி பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிப்பது போன்ற பல்வேறு சுவாரஸ்யமான செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
கூடுதலாகக் குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, சமூக விளையாட்டு, இலவச பல் மற்றும் சுகாதார பரிசோதனைகள், ஒரு நடமாடும் நூலகம், கிள்ளான் மாநகராட்சி தகவல் கவுண்டர், வேளாண் மடாணி விற்பனை மற்றும் அரசு நிறுவன கண்காட்சிகள் ஆகியவை இடபெற்றன.
2022 முதல் ஏற்பாடு செய்யப்பட்டு நான்காவது முறையாக நடைபெறும் இத்திட்டம், மாவட்டத்தைச் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கவனம் செலுத்துவதாகக் கிள்ளான் மேயர் டத்தோ ஹமீட் ஹுசைன் தெரிவித்தார்.
"இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், உள்ளூர் சமூகத்தினரிடையே வலுவான ஒற்றுமை உணர்வை உருவாக்குவதும், அதே நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதும் ஆகும்.


