பேங்கோக், மே 19 - நாட்டின் மகளிர் இரட்டையர் பேர்லி டான் - எம்.தீனா, தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடினர்
மேலும், 1984-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற, முதல் மலேசிய மகளிர் ஜோடி என்ற வரலாற்றையும் அவர்கள் படைத்தனர்.
நிமிபுட்ர் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், அவர்கள் தென் கொரியாவின் ஜியோங் நா யூன்-லீ யியோன் ஜோடியை 21-16, 21-17 என்ற புள்ளிகளில் எளிதாக வென்றனர்.
இந்த ஆட்டம் 58 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது.
பெர்லி தான் - எம்.தீனாவுக்கு வெற்றிப் பரிசாக ஒரு லட்சத்து 61,191 ரிங்கிட் வழங்கப்பட்டது.
பெர்னாமா


