புத்ராஜெயா, மே 18- இங்குள்ள பிரிசிண்ட் 9, பெருமாஹான் அவாம் குடியிருப்பின் ஏழாவது மாடியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து தவறி விழுந்தாக நம்பப்படும் இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு புகார் கிடைத்ததாக புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அய்டி ஷாம் முகமது தெரிவித்தார்.
இரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது தொடர்பான தகவலை புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த ஒரு மருத்துவரிடமிருந்து அப்புகார் கிடைக்கப் பெற்றதாக நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
அந்தக் குழந்தையை அவரின் தந்தையான உள்ளூர்வாசி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தை இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.


