துருக்கி, மே 17 - துருக்கியின் தியர்பாகிரில் நடைபெற்ற இயற்கை ஆபத்துகள் மற்றும் பேரிடர் மேலாண்மை (இஷாத்) குறித்த 7 வது சர்வதேச சிம்போசியத்தின் (2025 ) போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரழிவுகளை நிர்வகிப்பதில் சிலாங்கூர் அரசாங்கம் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது.
பேரழிவு நிர்வாகத்திற்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலீமி தலைமையிலான மாநில தூதுக்குழு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், சமூகப் பங்கேற்பு மற்றும் முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பேரழிவுத் தயார்நிலை வலுப்படுத்துவதற்கான மாநிலத்தின் முயற்சிகளை முன்வைத்தது.
"பேரழிவுக்கு பிந்தைய மேலாண்மை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு மேலாண்மை ஆகியவற்றில் சிலாங்கூரின் அனுபவத்தை வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
பேரழிவு பதிலுக்கான திறனை மேலும் மேம்படுத்த ஏஜென்சிகள் மற்றும் நிபுணர்களுடனான தொடர்பு களை ஆராய்வதில் சிலாங்கூர் உறுதிபூண்டுள்ளது.
இயற்கை பேரழிவுகளை நிர்வகிப்பதில் அணுகுமுறைகள் மற்றும் புதுமைகளைப் பகிர்ந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை இஷாத் 2025 ஒன்றிணைக்கிறது.
முன்னதாக, நஜ்வான், பெட்டாலிங் மாவட்டத்தின் அதிகாரி ஹுஸ்னுல் கைரில் முகமது மற்றும் கோலா லங்காட் மாவட்ட அதிகாரி தொங்கு ரோஹனா தொங்கு நவாவி ஆகியோருடன் இணைந்து துருக்கி இஸ்தான்புல் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் (அஃபாத்) அலுவலகத்திற்கு பணி விஜயம் செய்தார்.
அஃபாத் என்பது துருக்கியின் உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிறுவனமாகும், இது பேரழிவுகளை தடுப்பதற்கும், சேதத்தைத் தணிப்பதற்கும், பேரழிவுக்கு பிந்தைய மேம்பாடு முயற்சிகளை ஒருங்கிணைப்புக்கான ஒரு நிறுவனமாகும்.
இது துருக்கி முழுவதிலும் பேரழிவு மேலாண்மையின் அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கும் முக்கிய நிறுவனமாகவும் செயல்படுகிறது.


