பேங்கோக், மே 16 - 'ஓராங் ஊத்தான்` வகையை சேர்ந்த 2 குட்டிகளைக் கடத்திய சந்தேகத்தில் தாய்லாந்தில் ஓர் ஆடவர் கைதாகியுள்ளார்.
தலைநகர் பாங்கோக்கில், எண்ணெய் நிலையத்தில் வாடிக்கையாளரிடம் அவ்விரு குட்டிகளையும் ஒப்படைக்கும் போது, 47 வயதான அவ்வாடவர்காவல்துறையிடம் சிக்கினார்.
ஒன்றரை வயது மற்றும் பிறந்து ஒரு மாதமே ஆன அவ்விரண்டுக் குட்டிகளும், ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைக்கப்பட்டிருந்தன. அக்குட்டிகள் தலா 38,000 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்நிலையில், அவ்வாடவின் பின்னாலிருக்கும் வனவிலங்குக் கடத்தல் கும்பலைத் தேடும் பணியை தாய்லாந்து காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
போர்னியோ மற்றும் சுமத்ராவை பூர்வீகமாகக் கொண்ட 'ஓராங் ஊத்தான் மனிதக் குரங்குகள், வேகவாக அழிந்து வரும் விலங்கினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவை பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக இருந்த போதும், உலகில் அதிகளவில் கடத்தப்படும் குரங்கினங்களில் ஒன்றாகும்.


